Latest News
வியாழன், 23 ஏப்ரல், 2015

4ஜிபி ரேம் கொண்ட ஏசஸ் சென்ஃபோன் 2 வெளியானது

       4ஜிபி ரேம் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெற்றது ஏசஸ் சென்ஃபோன் 2. 

       இந்தியாவில் மூன்று வித மாடல்களில் வெளியாக இருக்கின்றது புதிய சென்ஃபோன் 2. கீழ் வரும் ஸ்லைடர்களில் ஏசஸ் சென்ஃபோன் 2 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை பாருங்கள்..

ஏசஸ் சென்ஃபோன் 2
                 ஏசஸ் சென்ஃபோன் 2 ZE551ML 4ஜிபி ரேம், 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ. 22,999, சென்ஃபோன் 2 ZE551ML 4ஜிபி ரேம், 32ஜிபி ஸ்டோரேஜ் ரூ. 19,999, சென்ஃபோன் 2 ZE551ML 2ஜிபி ரேம், 16ஜிபி ஸ்டோரேஜ் ரூ. 14,999, மற்றும் சென்ஃபோன் 2 ZE550ML ரூ. 12,999 என விலை நிர்ணயக்கப்பட்டுள்ளது.

இயங்குதளம் 
      அனைத்து சென்ஃபோன் 2 வகைகளும் ZenUI சார்ந்த கூகுளின் ஆன்டிராய்டு 5.0 லாலிபாப் கொண்டுள்ளது.

பிராசஸர்
     சென்ஃபோன் 2 ZE551ML 64 பிட் 2.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் இன்டெல் ஆடம் பிராசஸரும், 2ஜிபி ரேம் மாடல் 64 பிட் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் இன்டெல் ஆடம் பிராசஸரும், சென்ஃபோன் 2 ZE550ML மாடல் இன்டெல் ஆடம் பிராசஸரும் வழங்கப்பட்டுள்ளன. 

டிஸ்ப்ளே 
       ஏசஸ் சென்ஃபோன் 2 ZE551ML 5.5 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளேவும், சென்ஃபோன் 2 ZE550ML மாடல் 5.5 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளேவும் வழங்கப்பட்டுள்ளன.

சிம் கார்டு 
     மூன்று மாடல்களிலும் டூயல் சிம் கார்டு ஸ்லாட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது











  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

Item Reviewed: 4ஜிபி ரேம் கொண்ட ஏசஸ் சென்ஃபோன் 2 வெளியானது Rating: 5 Reviewed By: Unknown