Latest News
செவ்வாய், 28 ஏப்ரல், 2015

மிகவும் விரும்பப்படும் நடிகர் – முதலிடத்தில் அஜித், எட்டாவது இடத்தில் விஜய்!

இந்தியாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஒரியா… என பல மொழிகளில் சினிமா படங்கள் வெளியாகிகொண்டிருக்கின்றன. ஒவ்வொரு மொழியிலும் அந்தந்த ஊர் ரசிகர்களுக்கு, குறிப்பிட்ட நடிகர், நடிகைகளை பிடிக்கும்.
இதையே இணையதளம் ஒன்று ஆண்டுதோறும் ஒவ்வொரு மொழியிலும் ரசிகர்கள் மிகவும் விரும்பும் நட்சத்திரங்கள் யார் என்ற ஒரு கருத்து கணிப்பை நடத்தி வருகிறது. அதில் தமிழில் 2014 ஆம் ஆண்டின் விருப்பப்படும் நடிகர் யார் என்ற கருத்து கணிப்பை சமீபத்தில் நடத்தியது. இணையதளம் மூலமாக நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் 25 இடங்களை பிடித்த பிரபலங்களின் பட்டியலை அந்த இணையதளம் வெளியிட்டுள்ளது.
இதில் முதல் இடத்தை நடிகர் அஜித் பிடித்துள்ளார். அஜித் இதற்கு முன்னர் 2012 ஆம் ஆண்டு நான்காவது இடத்திலும், 2013 ஆம் ஆண்டு மூன்றாவது பிடித்துள்ளார். 2014-ல் முதலிடத்தை பிடித்து இருக்கிறார். இதன்மூலம் அவரது வளர்ச்சி உயர்ந்து வருவதாக கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
இரண்டாவது இடத்தை நடிகர் சூர்யா பெற்றுள்ளார். கடந்த ஆண்டும் சூர்யா இதே இடத்தில் தான் இருந்தார். தனுஷ், விக்ரம், ஆர்யா, அதர்வா ஆகியோர் 3, 4, 5 மற்றும் ஆறாவது இடத்தை பிடித்துள்ளனர். இவர்களில் அதர்வா கடந்த ஆண்டு 25 வது இடத்தில் இருந்தவர் இந்த ஆண்டு ஆறாவது இடத்தை பிடித்துள்ளார்.
நடிகர் விஜய் இந்தாண்டு எட்டாவது இடத்தை பெற்றுள்ளார். 2012-ல் 3வது இடத்திலும் 2014 ஆம் ஆண்டு 5 வது இடத்திலும் இருந்த விஜய் மேலும் பின்தங்கியுள்ளார்.
இதனிடையே மிகவும் விரும்பப்படும் நடிகர் பட்டியலில் அஜித்திற்கு முதலிடம் கிடைதுள்ளதையொட்டி அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள், குறிப்பாக டுவிட்டரில் #ThalaAjithTheMostDesirableMan என்ற பெயரில் ஒரு ஹாஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டிங் ஏற்படுத்தியுள்ளனர். இந்தியாவின் டாப் 10 டிரெண்டிங்கில் #ThalaAjithTheMostDesirableMan ஐந்தாவது இடத்தை பிடித்திருந்தது.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

Item Reviewed: மிகவும் விரும்பப்படும் நடிகர் – முதலிடத்தில் அஜித், எட்டாவது இடத்தில் விஜய்! Rating: 5 Reviewed By: Unknown