Latest News
சனி, 25 ஏப்ரல், 2015

அதிசயமான உணவகம்

னாவின் ஹூபே (Hubei) மாநிலத்தில் உள்ள மலைப்பகுதியில் “”ஃபாங்வேங் ரெஸ்டாரன்ட்(Fangweng Restaurant)” என்று சொல்லப்படுகின்ற உணவகமொன்று அமைந்துள்ளது.
இந்த உணவகத்தின் சிறப்பியல்பு என்னவென்றால் பெரும்பகுதி மலையில் அந்தரத்திலே அமைக்கப்பட்டுள்ளது. ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தால்,   பலநூறு அடி உயரமான மலையின் அடிப்பகுதி தெரியும். இதன் நுழைவுப் பகுதியும் மிகவும் தில்லானது. மலையின் செங்குத்தான மேற்பரப்பில்  அமைக்கப்பட்டுள்ள வாசல் மூலமாகவே உள்ளே நுழைய வேண்டும்.
1127-1279 காலப்பகுதியில் மலைவாழ் மக்களின் இருப்பிடமாக இருந்த இப்பகுதி பின்னாளில் சில திருத்த வேலைகளுடன் உணவகமாக  மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

Item Reviewed: அதிசயமான உணவகம் Rating: 5 Reviewed By: Unknown