Latest News
திங்கள், 20 ஏப்ரல், 2015

செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்; இனி கூகுளில் தேடலாம்: புதிய ஆப்ஸ் அறிமுகம்!


           ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்கள் தொலைந்தால், இனி கூகுளில் தேடி கண்டுபிடிக்க முடியும். தற்போது ஸ்மார்ட் போன்கள் தொலைந்து போனால் கூகுளில் தேடி கண்டுபிடிக்கும் 

 வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இதற்கென அப்ளிகேசன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதை உங்கள் செல்போனில் நிறுவிக்கொண்டு, அதில் கூகுள் கணக்கின் வழியே உங்கள் ஸ்மார்ட்போன், டேப்லட் அல்லது கணினி ஆகியவற்றின் தகவல்களை இதில் பதிவு செய்ய வேண்டும்.
கூகுளில் தேடுவது எப்படி?
கூகுள் தேடல் பக்கத்தில் Find My Android Phone! என்று டைப் செய்ததும் வரும் திரையில் தொலைந்து போன ஆண்ட்ராய்டு செல்போனின் தகவலை குறிப்பிட்டால் அது எங்கிருக்கிறது என்பது பற்றிய தகவல்கள் தெரிந்துவிடும். நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து எவ்வளவு தொலைவில் உங்கள் போன் இருக்கிறது என்பது உள்ளிட்ட தகவல்களை இந்த அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்வதன் மூலம் கண்டுபிடித்து விடலாம்.
மொபைல் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்தால் அதில் இருக்கும் ‘ரிங்’ என்ற வசதியை பயன்படுத்தி, உங்கள் மொபைலை செயல்படாமல் பூட்டி வைக்க முடியும். தேவைப்பட்டால் போனில் உள்ள தகவல்களை அழிக்கவும் முடியும். இந்த சேவை முன்னதாகவே ஆப்பிள் ஐபோனில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

Item Reviewed: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்; இனி கூகுளில் தேடலாம்: புதிய ஆப்ஸ் அறிமுகம்! Rating: 5 Reviewed By: Unknown