Latest News
புதன், 29 ஏப்ரல், 2015

மகாராஜா எக்ஸ்பிரஸ் - ஆசியாவின் காஸ்ட்லி ரயில் பயணம்!

           இந்தியாவில் சொகுசு ரயில் பயணம் என்பது 1982-ஆம் ஆண்டு ராஜஸ்தான் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட 'பேலஸ் ஆன் வீல்ஸ்' ரயிலிலிருந்து தொடங்குகிறது. 



    

             இப்படியாக துவங்கிய பயணத்தில் இன்று இந்தியா மட்டுமல்லாமல் ஆசியாவிலேயே காஸ்ட்லி ரயிலாக மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயிலை இந்திய ரயில்வே உருவாக்கியுள்ளது. 

             அந்தக் காலங்களில் மகாராஜாக்கள் திருமணத்துக்கு செல்ல, வேட்டையாட செல்லுதல் போன்றவற்றுக்காக தங்களுக்காக தனியே சொகுசு ரயில் ஒன்றை பயன்படுத்தி வந்தனர். 

            இதன் அடிப்படையிலேயே இன்று மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு 7 நட்சத்திர ஹோட்டலில் உள்ள சகல வசதிகளோடும் பயணிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

 கட்டணம் :- 
                      பெரியவர்கள் : 2.39 லட்சம் முதல் 14.75 லட்சம் (நபர் ஒன்றுக்கு) சிறியவர்கள் : 1.20 லட்சம் முதல் 7.40 லட்சம் (5 முதல் 12 வயதுவரை) 

பிராயணத் திட்டங்கள் 

                       மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயில் மொத்தம் 5 பிராயணத் திட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவை ஹெரிடேஜ் ஆஃப் இந்தியா, இந்தியன் ஸ்ப்லென்டர், இந்தியன் பனோரமா, டிரெஷர்ஸ் ஆஃப் இந்தியா, ஜெம்ஸ் ஆஃப் இந்தியா என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. 

                    இதன் மூலம் அரண்மனைகள், கோட்டைகள், உலகப் புராதனச் சின்னங்கள், பாலைவனங்கள், விலங்குகள், ஆன்மிக மையங்கள், மலைகள் என்று இந்தியாவின் கலாச்சாரத்தையும், பாரம்பரியப் பெருமைகளையும், இயற்கை வனப்பையும் அணு அணுவாக பயணிகள் ரசித்து மகிழலாம். 

 ஹெரிடேஜ் ஆஃப் இந்தியா : 
                     (மும்பை-அஜந்தா-உதைபூர்-ஜோத்பூர்-பிகானேர்-ஜெய்ப்பூர்-ரணதம்போர்-ஃபதேபூர் சிக்ரி-ஆக்ரா-டெல்லி)

 இந்தியன் ஸ்ப்லென்டர் : 
                    (டெல்லி-ஆக்ரா-ரணதம்போர்-ஜெய்ப்பூர்-பிகானேர்-ஜோத்பூர்-உதைபூர்-பலசினோர்-மும்பை) 

இந்தியன் பனோரமா : 
                 (டெல்லி-ஜெய்ப்பூர்- ரணதம்போர்-ஃபதேபூர் சிக்ரி-ஆக்ரா-குவாலியர்-ஓர்சா-கஜுராஹோ-வாரணாசி-லக்னோ-டெல்லி)

டிரெஷர்ஸ் ஆஃப் இந்தியா :
               (டெல்லி-ஆக்ரா-சவாய் மாதோபூர்-ஜெய்ப்பூர்-டெல்லி)

ஜெம்ஸ் ஆஃப் இந்தியா :
           (டெல்லி-ஆக்ரா-ரணதம்போர்-ஜெய்ப்பூர்-டெல்லி) சிறப்பம்சங்கள் மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள அதிநவீன வசதிகொண்ட 23 ரயில் பெட்டிகளில் மொத்தம் 88 பேர் பயணம் செய்யலாம்.
         
            இவற்றில் 14 விருந்தினர் பெட்டிகளும், 20 டீலக்ஸ் கேபின்களும், 18 ஜூனியர் சூட்களும், 1 பிரஸிடென்ஷியல் சூட்டும் அடங்கும். இதன் குறிப்பிடும்படியான அம்சங்களாக அனைத்து கேபின்களிலும் கிளைமேட் கண்ட்ரோல் வசதி, வைப்ஃபை, சாட்டிலைட் சேனல்கள் மற்றும் டி.வி.டியுடன் தொலைக்காட்சி, தொலைபேசி, ரெஸ்டாரன்ட்கள், பார், விளையாட்டரங்கம் ஆகியவை அறியப்படுகின்றன. 

மேலும் தகவலுக்கு : http://www.maharajas-express-india.com/
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

Item Reviewed: மகாராஜா எக்ஸ்பிரஸ் - ஆசியாவின் காஸ்ட்லி ரயில் பயணம்! Rating: 5 Reviewed By: Unknown