Latest News
புதன், 22 ஏப்ரல், 2015

அந்த நடிகைகூட நடிக்க முடியாது, விஷால் பிடிவாதம்!


விஷால் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் பாயும் புலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.
இதன் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தையடுத்து லிங்குசாமி இயக்கும் சண்டைக்கோழி 2ம் பாகத்தில் நடிக்கவுள்ளார். இதில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க எமி ஜாக்சன் உட்பட மேலும் சில முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்களாம்.
இந்நிலையில் விஷால், தன்னுடன் ஒரு படத்தில் நடித்த நடிகையுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று மறுப்பு தெரிவித்து வருகிறாராம். ரசிகர்கள் ஒரு படத்தில் நடித்த நடிகையுடன், மறுபடியும் வேறு படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தால் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் என்று விளக்கமளிக்கிறாராம்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

Item Reviewed: அந்த நடிகைகூட நடிக்க முடியாது, விஷால் பிடிவாதம்! Rating: 5 Reviewed By: Unknown