வடிவேலு நடித்துள்ள எலி படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாதபோதும், ஒரு பக்கம் படப்பிடிப்பு இன்னொரு பக்கம் இறுதிக்கட்ட பணிகள் என்று முடுக்கி விட்டுள்ளனர்.
அதோடு, பெரும்பாலும், ஸ்பாட்டில் பேசிய காமெடி டயலாக்குகள் எதிர்பார்த்தபடி அமையாதபோது, டப்பிங் தியேட்டரில் அமர்ந்தே எக்ஸ்ட்ரா டயலாக்குகளை சேர்த்து காட்சிகளை ருசிகரமாக மாற்றும் வடிவேலு, இந்த படத்திற்கு முந்தைய படங்களை விட கூடுதல் கவனம் செலுத்துகிறார்.
அதனால் டப்பிங் பேசும்போது ஏற்கனவே பேசிய வசனங்கள் திருப்தி இல்லாதபட்சத்தில் புதிய வார்த்தைகளை சேர்த்து பேச வைத்து வருகிறார். அந்த வகையில், கிட்டத்தட்ட இப்போது டப்பிங் பணிகளும் முடியும் தருவாயில் இருப்பதால், பின்னணி இசைகோர்க்கும் பணியிலும் இறங்கி விட்டார் வித்யாசாகர்.
அதனால், மே மாதம் வெளியிட திட்டமிடப்பட்ட எலி ஜூன் மாதத்துக்கு தள்ளி போய் விடுமோ என்று கருதப்பட்டு வந்தநிலையில், தற்போது மே மாதம் 22-ந்தேதி எலியை எப்படியேனும் தியேட்டருக்கு கொண்டு வந்தே தீருவது என உறுதியான முடிவெடுத்து விட்டாராம் வடிவேலு. ஆக, பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது எலி படக்குழு.
0 comments:
கருத்துரையிடுக