சிட்டி சினி கிரியேஷன்ஸ் சார்பாக ஜி.சதிஸ்குமார்மிகுந்த பொருட்ச்செலவில் பிரமாண்டமாகதயாரித்து, யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு மற்றும் சதா இணைந்து நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் “எலி”.
1969-ஆம் ஆண்டு பிரபல இந்தி திரைப்பட நடிகர் ராஜேஷ் கண்ணா, சர்மிளா தாகூருடன் இணைந்து நடித்து மாபெரும் வெற்றிப்பெற்ற படம் “ஆராதனா”. இப்படத்தில் இடம் பெற்ற பிரபல பாடலான ‘மேரே சப்னோ கி ராணி’ என்ற பாடலைமுறையாக உரிமம் பெற்று, நடன இயக்குனர் தாராவின் நடன இயக்கத்தில் வடிவேலுவும், சதாவும் இப்பாடலுக்கு நடனமாட, மூணாரில் படமாக்கப்பட்டது.ஒரு தமிழ் படத்தில் ஒரு முழு இந்தி பாடல் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.
வடிவேலுவும், சதாவும் நடனமாட ‘கொள்ளை அழகு கொட்டி கிடக்கு’ என்ற கிளப் பாடலுக்குபிரபல கலை இயக்குனர் தோட்டா தரணியின் கை வண்ணத்தில் ஐந்து பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது.
மேலும் இப்படத்தில் வில்லன் மற்றும் அடியாட்களுடன் மோதும் கிளைமாக்ஸ் சண்டை காட்சியைசூப்பர் சுப்புராயனின் சண்டை பயிற்சியில் நகைச்சுவை பின்ணணியுடன் அனைவரும் ரசிக்கும் வண்ணம் படமாக்கப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைப்பெற்றது.விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் இசை வெளியீடு மிக விரைவில் நடைபெற உள்ளது.
0 comments:
கருத்துரையிடுக