Wednesday 9, Apr 2025
Latest News
வெள்ளி, 22 மே, 2015

Anonymous ஹாலிவுட் படத்தில் நடிக்கும் தனுஷ்!


          ‘கொல வெறி’ பாடல் தனுஷை உலகப் புகழ் பெற வைத்தது. அதன் பலனாக ஹிந்திப் பட உலகிலும் அவர் நுழைவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்து. ‘ராஞ்சனா, ஷமிதாப்’ என இரண்டு ஹிந்திப் படங்களில் நடித்து முடித்து விட்டார் தனுஷ். தற்போது ஒரு ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக அவர் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார் எனத தகவல்கள் தெரிவிக்கின்றன.
மர்ஜானி சட்ராபி என்ற பிரெஞ்ச் – இரானிய திரைப்பட பெண் இயக்குனர், ‘The Extraordinary Journey of the Fakir Who Got Trapped in an Ikea Wardrobe’ என்ற ஆங்கில நாவலைத் தழுவி எடுக்கும் படம் ஒன்றில் தனுஷை நாயகனாக நடிக்க வைக்கப் பேசி வருவதாக அவரே கேன்ஸ் திரைப்பட விழாவில் தெரிவித்துள்ளார். டில்லியிலிருந்து பிரான்ஸுக்குப் பயணமாகும் ஒருவன் பிரெஞ்ச் பெண் ஒருவருடன் காதல் வயப்படுவதுதான் படத்தின் கதை.
மர்ஜானி சட்ராபி அவருடைய பிரெஞ்ச் – இரானிய அனிமேஷன் படமான ‘பெர்சிபோலிஸ்’ என்ற படத்தின் மூலம் புகழ் பெற்றவர். அந்தப் படம் ஆஸ்கர் விருது போட்டியிலும் கலந்து கொண்டுள்ளது. இப்போதைக்கு இந்தியப் பட நாயகனாக இருக்கும் தனுஷ், இந்தப் படத்தில் நடித்தால் இனி உலக நாயகன் என தாராளமாக அழைக்கப்படலாம்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

Item Reviewed: ஹாலிவுட் படத்தில் நடிக்கும் தனுஷ்! Rating: 5 Reviewed By: Unknown