Wednesday 9, Apr 2025
Latest News
சனி, 30 மே, 2015

Anonymous அஞ்சலி, சிவ கார்த்திகேயன் எடுத்துக் கொண்ட நெருக்கமான செல்பி

கடந்த சில தினங்களாக அஞ்சலி புயல்தான் கோடம்பாக்கத்தில் வீசிக்கொண்டிருக்கிறது. அஞ்சலியும், நடிகர் சிவ கார்த்திகேயனும் கடந்த சில தினங்களாக சென்னை நட்சத்திர விடுதி ஒன்றில் ஒன்றாக தங்கியிருக்கிறார்கள் என்பதே புயலின் சாராம்சம். இதன் சாட்சியாக இருவரும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட செல்பியும் வெளியாகியுள்ளது.


சித்தியுடன் சண்டை, தன்னைத்தானே கிட்னாப் செய்து கொண்டது, வாரக்கணக்கில் தலைமறைவு என்று திரைத்துறைக்கு வெளியே உலவிக் கொண்டிருந்த அஞ்சலி அப்பாடக்கர் படத்தின் மூலம்தான் கோடம்பாக்கத்தில் மீண்டும் லேண்ட் ஆனார். உடனேயே மாப்ள சிங்கம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கார்த்திக் சுப்பாராஜின் இறைவி படத்திலும் அஞ்சலி ஒப்பந்தமாகியுள்ளார்.
 
இப்படி இரண்டிரண்டு படிகளாக தாவி உச்சிக்கு வரும்நிலையில்தான் சிவ கார்த்திகேயனுடனான கிசுகிசுவில் சிக்கியிருக்கிறார். இந்த விவகாரத்தில் அஞ்சலி எந்த விளக்கமும் தரவில்லை. அவர் சார்பில் அவரது மேனேஜர் விளக்கமளித்துள்ளார்.
 
"அஞ்சலி சென்னை வந்து பல நாட்கள் ஆகிவிட்டது. சிவகார்த்திகேயனை சமீபத்தில் அவர் சந்திக்கவே இல்லை. கடந்த வருடம் சிங்கப்பூரில் நடிகர்– நடிகைகள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் பங்கேற்றார்கள். சிவகார்த்திகேயனையும், அஞ்சலியையும் இணைத்து வெளியான செய்தியில் உண்மை இல்லை, தவறானவை" என்று கூறியுள்ளார்.



  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

Item Reviewed: அஞ்சலி, சிவ கார்த்திகேயன் எடுத்துக் கொண்ட நெருக்கமான செல்பி Rating: 5 Reviewed By: Unknown