ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி
என்னது ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியா? சந்தேகமாகதான் அந்த செய்தியை நாம் வெளியிட்டிருந்தோம். வதந்தி என்று நாம் நம்பிய விஷயத்தை, உண்மை என்று போட்டுடைத்துள்ளார் வெங்கட்பிரபு.
வெங்கட்பிரபுவின் முன்னாள் அசிஸ்டெண்ட்தான் ரஞ்சித். ரஜினியை அவர் இயக்கப் போவது தெரிந்ததும், நீ என்னை பெருமைப்பட வச்சிட்ட. வாட் ஏ மொமண்ட். லவ் யூடா. பின்னி பெடல் எடு என ட்விட்டரில் கூறியுள்ளார்.
ரஜினியை இயக்க ரஞ்சித்துக்கு வாய்ப்பு கிடைத்ததைதான் இப்படி பரவசமாக குறிப்பிட்டுள்ளனார் வெங்கட்பிரபு.
ரஞ்சித் ரஜினியை வைத்து இயக்கும் படம் ஜுன் அல்லது ஜுலையில் தொடங்கும் என்றும், குறுகிய கால தயாரிப்பாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்தப் படம் கேங்ஸ்டர் கதை என்றும், ரஜினி கேங்ஸ்டராக நடிப்பதாகவும் கூடுதல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
கருத்துரையிடுக