Thursday 10, Apr 2025
Latest News
வெள்ளி, 1 மே, 2015

Anonymous ‘வை ராஜா வை’ திரை விமர்சனம்!


‘வை ராஜா வை’ ஐஸ்வர்யா தனுஷின் இரண்டாவது படம், கௌதம் கார்த்தியின் மூன்றாவது படம், யுவனின் இசை இதையெல்லாம் தாண்டி தனுஷ் வேறு நடித்திருக்கிறார் என்ற பெரிய எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்திருக்கிறது. ஒரு ”அழகிய தமிழ் மகன்”, ”மங்காத்தா” விளையாடினால் எப்படி இருக்கும்? இதுதான் வை ராஜா வையின் கதைச்சுருக்கம்.
வழக்கம் போல இந்த படத்திலும் ஹீரோவின் பெயர் கார்த்திக், அதே வழக்கம் போல பிரியா என்று பெயர் வைத்த ஹீரோயினை காதலிக்கிறார். ஆனால் இவருக்கு வழக்கத்துக்கு மீறிய ஒரு சக்தி இருக்கிறது, அதுதான் நடக்கபோவதை முன்கூட்டியே அறியும் சக்தி. அதை எல்லோரிடமிருந்து மறைக்க நினைக்கிறார். இவருடன் பணியாற்றும் விவேக்கிற்க்கு அது ஒருகட்டத்தில் தெரிய, சூதாட்டத்தில் தான் இழந்ததை மீட்க, தன் பிரச்சனையில் இருந்து வெளிவர கௌதமை சூதாட அழைக்கிறார். அதற்கு அவரும் சம்மதிக்கிறார், இதிலிருந்துதான் பிரச்சனை ஆரம்பம் ஆகிறது.சூதாட்டத்தில் கௌதமிடம் ஒரு கோடியை இழக்கும் டேனியல் பாலாஜி, இவரை பயன்படுத்தி பல கோடிகளை சம்பாதிக்க நினைக்கிறார். அவர் விரித்த வலையில் அவரையே சிக்க வைத்துவிட்டு அலேக்காக எஸ்கேப் அகிறார் கௌதம். டாப்சியின் உதவியுடன் தப்பித்து கௌதமை பழிவாங்க ரீஎண்ட்ரி கொடுத்து மிரளவைக்கிறார் டேனியல்! இதன் பின் என்ன நடந்தது என்பது தான் மீதி கதை.
கௌதம் கார்த்திக்கிற்கு நடிப்பு கூடவே பிறந்தது போலும் அவ்வளவு எளிதாக நடித்திருக்கிறார். டேனியல் தன் மீது துப்பாக்கி வைத்து மிரட்டும் போதும் சரி, இவர் டேனியல் மீது துப்பாக்கி வைத்து மிரட்டும் போதும் சரி விசில் சத்தம் காதை கிழிக்கிறது! பிரியா ஆனந்த் கண்ணுக்கு குளிர்ச்சியாக வந்து செல்கிறார் மற்றபடி நடிப்பதற்க்கு பெரிய இடம் இல்லை.விவேக் இதில் வெறும் நகைச்சுவை நடிகராக மட்டும் இல்லை அதற்கும் மேல் இப்படத்தில் இவருக்கு ஒரு முக்கிய கதாப்பாத்திரம் கிடைத்திருக்கிறது, கிடைத்த இடத்தில் எல்லாம் கில்லி ஆடியிருக்கிறார் விவேக்.இவரை தவிர, சதீஷ் , மனோபாலா , M.S பாஸ்கர் எல்லாம் Extra bonus. என்னதான் இயக்குனர் வசந்த் இதில் நடித்திருந்தாலும் அது ஒரு கௌரவ வேடம் போல் தான் உள்ளது. டாப்சியின் posh ஆன நடிப்பு ஜோர்.டேனியல் பாலாஜிக்கு இது ஒரு நல்ல come back. ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டி எடுக்கிறார். இதையெல்லாம் தாண்டி, வந்தது இரண்டு நிமிடங்கள் என்றாலும் ஒட்டுமொத்த கைத்தட்டல்களையும் அள்ளி செல்கிறார் தனுஷ்.வேல்ராஜின் ஒளிப்பதிவு படத்தை அழகாக்க துணைபுரிகிறது. VT விஜயனின் எடிட்டிங் படத்தை ராக்கெட் வேகத்தில் நகர வைக்கிறது. வை ராஜா வையின் ராஜாவே யுவன் என்று சொல்லலாம், பின்னணி இசையில் தெறிக்கவிட்டிருக்கிறார்.
க்ளாப்ஸ்
படத்தின் நீளம் குறைவு என்பதால் சுவாரஸ்யம் குறையாமல் படம் நகர்கிறது
விவேக் & சதீஸ் காமெடி காட்சிகள்
யுவனின் பின்னணி இசை
பல்ப்ஸ்
சில இடங்களில் logic மீறல்கள்,
சரியான இடங்களில் பாடல் அமைக்கப்படாதது.
காதலுக்கு சரியான பின்னணி இல்லாதது.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

Item Reviewed: ‘வை ராஜா வை’ திரை விமர்சனம்! Rating: 5 Reviewed By: Unknown