சின்னத்திரை தொகுப்பாளார்களில் திவ்யதர்ஷினிக்கு என்று பெரிய ரசிகர்கள் வட்டமே உள்ளது. இவரின் நிகழ்ச்சிக்கு பிரபலங்கள் வருவதை மிகவும் விரும்புவார்கள். ஏனெனில் அந்தளவிற்கு ஜாலியாக நிகழ்ச்சியை கொண்டு செல்வார்.
அதேபோல் சமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவில் இவர் மிகவும் சத்தமாக பேசி தொகுத்து வழங்க, இது ரசிகர்களுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.இதனால் ரசிகர்கள் நேற்று டுவிட்டரில் கிண்டலடிக்க, இதற்கு டிடி ‘என்னை மன்னியுங்கள், கண்டிப்பாக அடுத்த முறை என் தவறை சரிசெய்து கொள்கிறேன்’ என பொதுவாக மன்னிப்பு கேட்டு டுவிட் செய்துள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக