தமிழ் டிவி சேனல்களில் வித்தியாசமான நிகழ்ச்சிகளை நடத்தி மக்களின் அமோக ஆதரவை பெற்ற ஒரே டிவி விஜய் டிவி. அப்படிப்பட்ட அந்த விஜய் டிவி 2006ம் ஆண்டு முதல் விஜய் அவாட்ஸ் என்ற தமிழ் சினிமாவிற்கு விருது வழங்கும் விழாவை கடந்த 9வருடங்களாக நடத்தி வருகிறது.
எந்த ஆண்டும் இல்லாதளவுக்கு இந்த ஆண்டு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பல பிரச்சனைக்கு நடுவே அரங்கேறியது “விஜய் அவார்ட்ஸ்”. விருதில் இளையராஜா, விருது வாங்காமலே கிளம்பிவிட்டார். விருதில் நடிகர்கள் பலர் கலந்து கொள்ளவில்லை, வந்தவர்களும் பாதியிலே கிளம்பிவிட்டார்கள். சில நடிகர்கள் மேடையிலேயே, என்ன இன்னும் ஃபுட்டேஜ் போதவில்லையே என்று கலாய்த்ததும் அரங்கியேறியது. குறிப்பாக, பல நடிகர்கள் பாதியிலேயே வெளியேறியதும் நடைபெற்றது. விழாவில் டிடியின் செயல்பாடுகள் சரியில்லை என பகிரங்கமாக பேசப்பட்டது.
விருது விழாவுக்கு பின் நடிகர்கள், நடிகைகள் நிகழ்ச்சிக்கு அழைத்தால் பெரிதாக கண்டுகொல்வதில்லையாம், தயாரிப்பாளர் சங்கத்தின் பிரச்சனையும் இன்னும் தீர்வுக்கு வராததால் இந்த ஆண்டோடு விஜய் அவாட்சுக்கு முழுக்கு போடா விஜய் டீவி முடிவு செய்துள்ளதாம்.
இந்நிலையில் நேற்று டிடி தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். டுவிட்டரில் அவர், அன்பாக சொன்னவர்களுக்கும், மோசமாக சொன்னவர்களுக்கும் நன்றி. உங்கள் கருத்துக்களை ஏற்கிறேன், அடுத்தமுறை நான் சிறப்பாக செயல் படுவேன். என்குடும்பத்தாரிடமும் டீவி சேனலிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக