
இதனால் ஜி.பி.எஸ், ரேடியோ, தகவல் தொடர்பு மின்சார பரிமாற்றங்கள் பாதிக்ககூடும்.என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சூரியனில் இருந்து அதிசக்தி வாய்ந்த வெப்பம் வெளிப்படும் போது புயலாக மாறி அண்ட வெளியில் அவ்வப்போது பரவி வருகிறது. இதனால் பூமிக்கு ஆபத்து என்று பல முறை கூறப்பட்டது. எனினும், இதுவரை எந்த ஆபத்தும் ஏற்பட்டது இல்லை.
சூரிய புயல் மூன்று வகைப்படுகிறது. சி, எம், மற்றும் எக்ஸ் வகைகளாகும் எக்ஸ் சூரிய புயல் என்பது முகவும் சக்தி வாய்ந்தது இது எம் சூரிய புயலைவிட 10 மடங்கு வலிமையானதுஆகும்.
எக்ஸ் வகை சூரிய புயல் வீசினால் ரேடியோ, தகவல் தொடர்பு மின்சார பரிமாற்றங்கள் பாதிக்ககூடும். இது வளிமண்டலத்திலோ அல்லது மனிதர்களையோ பாதிக்காது.
சூரியனில் இந்த சூரிய புயல் கிழக்கு பகுதியில் உருவாகிறது ஆனால் இந்த புயல் பூமியை தாக்கும் என எதிர்பார்க்கவிலை என அமெரிக்க விண்வெளி வானிலை கணிப்பு மைய விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக