Friday 11, Apr 2025
Latest News
செவ்வாய், 19 மே, 2015

Anonymous மனித மாமிசம் விற்பனை செய்த நைஜீரிய ஓட்டல் மூடப்பட்டது


நைஜீரியா ஓட்டலில் மனித மாமிசம் சப்ளை செய்யப்பட்டது. 

தென்-கிழக்கு நைஜீரியாவில் அனம்பரா நகரில் ஒரு ஓட்டல் உள்ளது. இங்கு நடைபெற்ற செயல்பாடு கள் அப்பகுதியில் உள்ளவர் களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அங்கு மனித மாமிசம் சமைத்து விற்பனை செய்வதும் தெரியவந்தது. எனவே இதுகுறித்து போலீ சுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. 

உடனே அங்கு சென்ற போலீசார் ஓட்டல் முழுவதும் சோதனை நடத்தினர். அப்போது அங்கு மனித மாமிசம் சமைத்து வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்வது கண்டுபிடிக்கப் பட்டது. மேலும் அங்கு ரத்தம் வடிந்த நிலையில் மனித தலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அங்கிருந்து பயங்கர ஆயுதங்களூம் கையெறி குண்டுகளும் கைபற்றப்பட்டன.

அதை தொடர்ந்து ஓட்டல் உரிமையாளர், நிர்வாகி, ஊழியர் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அந்த ஓட்டல் மூட உத்தரவிடப்பட்டது. 

நைஜிரியாவில் லட்சகணக்கான கூலி தொழிலாளிகள் உள்ளனர் அவர்களின் 4 நாள் சம்பளம்  2.20 அமெரிக்க டாலர் உணவு விடுதியில் மனித கறிக்காக வசூலிக்கபட்டு உள்ளது என உள்ளூரை சேர்ந்த மத போதகர் ஒருவர் கூறினார். 

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

Item Reviewed: மனித மாமிசம் விற்பனை செய்த நைஜீரிய ஓட்டல் மூடப்பட்டது Rating: 5 Reviewed By: Unknown