விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் ஜட்ஜாக இருந்து வருபவர்களில் மாஜி ஹீரோயினி ராதாவும் ஒருவர். இந்த நிகழ்ச்சியில் நீண்டகாலமாக பங்கேற்று வரும் அவர், நிகழ்ச்சியில் ஆடும் நபர்களின் நடனத்திற்கு மதிப்பெண் கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் நல்ல கமெண்டுகளும் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்றைய தினம் ஜோடி சீசன்- 8 நிகழ்ச்சியில் ராதா பங்கேற்றபோது அவரது மகளான நடிகை கார்த்திகா நாயரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கமெண்டுகளை கொடுத்தார். அப்போது, சில நடன டீம் அற்புதமாக நடனமாடியபோது அவர்களை வியப்புடன் பாராட்டிய கார்த்திகா, முத்தங்களையும் பறக்க விட்டு அவர்களை திக்குமுக்காட வைத்தார்.
குறிப்பாக, மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன -என்ற தில்லானா மோகனாம்பாள் பட பாடலில் ஒரு பெண் நடனமாடியபோது, இந்த மாதிரி என்னையும் மேடைகளில் நடனமாட வைக்க என் அம்மா ஆசைப்பட்டார். ஆனால் அது நடக்கவில்லை. இருப்பினும், இப்போது நீங்கள் ஆடியதை நான் ஆடியது போலவே பீல் பண்ணினேன் என்று தனது மனநிறைவான கமெண்டினை கொடுத்து அந்த போட்டியாளரை உற்சாகப்படுத்தினார் கார்த்திகா நாயர்.
பின்னர், கெஸ்ட் ஆடும் நேரம் வரும்போது, ஜட்ஜ் இருக்கையில் இருந்து எழுந்து மேடைக்கு சென்று நடன கலைஞர்களுடன் இணைந்து வேலையில்லா பட்டதாரி படத்தின் பாடலுக்கு நடனமாடினார் கார்த்திகா. ஆரம்பத்தில் பயிற்சி எடுக்காமல் வந்து விட்டவரைப்போன்று ஆடத்தொடங்கியவர், பின்னர் தன்னுடன் சேர்ந்து ஆடியவர்களைப்பார்த்து பிக்கப் பண்ணிக்கொண்டு சிறப்பாக ஆடினார் கார்த்திகா நாயர்
0 comments:
கருத்துரையிடுக