னுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாரி’, சிவகார்த்திகேயன் நடிப்பில் லிங்குசாமி தயாரித்துள்ள ‘ரஜினி முருகன்’ ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாக உள்ளது. அனிருத் இசையில் மாரி படத்தின் இசை மே 25ம் தேதி வெளியாக உள்ளது.
ராதிகா சரத்குமார் , லிஸ்டின் ஸ்டீபனின் மேஜிக் ஃப்ரேம்ஸ் மற்றும் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூன்றும் இணைந்து தயாரிக்கும் இப்படம் ஜூலை 17ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே நாளில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி நடிப்பில் பொன் ராம் இயக்கத்தில் ‘ரஜினி முருகன்’ படமும் வெளியாக உள்ளது.
சிவகார்த்திகேயனை பெரிய நடிகராக்கியதில் தனுஷுக்கு பெரும் பங்கு உள்ளது. கடைசியில் அந்த தனுஷ் படத்துடனே மோத வருகிறார் சிவகார்த்திகேயன். இவர்களில் யார் படம் பெரிய வெற்றி பெறும் என்ற பரபரப்பான எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக