தகவல் தொழில்நுட்ப துணைபொருள்கள், ஒலி - ஒளி மற்றும் கண்காணிப்பு பொருள்களை தயாரித்து வரும் ஜீப்ரானிக்ஸ் நிறுவனம், ராக்கர் மற்றும் ஈடன் என்னும் இரண்டு புதுவகை ஸ்பீக்கர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஸ்பீக்கர்களின் சிறப்பம்சம் அதில் இருக்கும் ப்ளூடூத் வசதி. இதனால் எந்தவொரு மொபைல் தொலைபேசி, டேப்லட் அல்லது மடிக்கணினியிலிருந்து இணைப்பு வயர்கள் இல்லாமலே பயன்படுத்தலாம். ஸ்பீக்கர்கள் பேட்டரியில் இயங்குகின்றன.
மேலும் USB பென்டிரைவ் வசதி, SD/MMC கார்ட் வசதி, FM ரேடியோ, ஆக்ஸ் 3.5mm இன்புட் மற்றும் ரிமோட் கன்ட்ரோல் ஆகிய பலவகை சிறப்பம்சங்கள் உள்ளன.
இந்த வகை ஸ்பீக்கர்கள் இந்திய சந்தையில், ஒரு வருட உத்தரவாதத்துடன் குறைந்த விலையில் கிடைக்கிறது.
0 comments:
கருத்துரையிடுக