தனுஷ் இந்தியில் அறிமுகமான ராஞ்சனா படத்தை இயக்கியவர், ஆனந்த் எல் ராய்.
மாதவன், கங்கனா நடிப்பில் தனு வெட்ஸ் மனு இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறவர், அதையடுத்து மீண்டும் தனுஷை இயக்குகிறார். இது தனுஷின் 3-வது இந்திப் படம்.
இது குறித்து பேசிய தனுஷ்,
"நான் நடித்ததிலேயே இந்த படம் தான் மிக அழுத்தமான காதல் கதையாக இருக்கும். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கும். ஒரு நடிகராக என்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ளும் வகையில் நல்ல கதாபாத்திரங்கள் தொடர்ந்து அமைந்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.
0 comments:
கருத்துரையிடுக