புதுமுக நாயகர்களாக மீனேஷ் கிருஷ்ணா, மனோ தீபன் நடிக்க, இதில் நாயகியாக நடிக்கும் அஸ்ராவும் புதுமுகமே. பஞ்சாலையை களமாக கொண்ட காதல் கதையாக உருவாகிக் கொண்டிருக்கும் படம் ‘ ஒரு தோழன் ஒரு தோழி’.
’இணைப் பிரியாத இரண்டு நண்பர்களின் வாழ்க்கையில் ஒரு பெண் குறுக்கிடும்போது என்ன நடக்கிறது. காதல் ஜெயிக்கிறதா..? இல்லை நட்பா..? என்பதை அழகாக சொல்லியிருக்கேன்’. என்கிறார், திரைப்பட கல்லூரி மாணவரும், இப் படத்தின் இயக்குனருமான மோகன். கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்குவதோடு, நட்பை போற்றும் விதமாக ஒரு பாடலையும் எழுதியிருக்கிறார்.
அத்துடன் ஜெய்கிருஷ் என்கிற புதுமுக இசையமைப்பாளரையும் அறிமுகம் செய்திருக்கிறார். ஒரு நிஜ பஞ்சாலையில் அனுமதி பெற்று, வேகமாக படப்பிடிப்பு நடத்தி வருவதால், விடுமுறை முடிந்து அடுத்து, பள்ளிகள் திறக்கும் முன் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்.

0 comments:
கருத்துரையிடுக