முன்னணி பாடலாசிரியராக வளர்ந்து வந்த பா.விஜய் நடிப்பு ஆசையில் ஞாபகங்கள், இளைஞன் படங்களில் நடித்தார். இரண்டுமே மோசமான தோல்வியை சந்தித்தது.
கடைசியாக, ஒரு சிடி 30 ரூபாய் என்ற படத்தில் நடித்தார். தற்போது அந்தப் படம், தகடு தகடு என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதன் கதை எழுத்தாளர் யுவகிருஷ்ணாவின் அழிக்கப் பிறந்தவன் நாவலை திருடி எடுக்கப்பட்டது. படம் பல சிக்கல்களால் இன்னும் வெளியாகவில்லை.
சோதனை மேல் சோதனைகள் ஏற்பட்ட பிறகும் ஹீரோ ஆசை பா.விஜய்யைவிட்டு போகவில்லை. ஸ்ட்ராபெர்ரி என்ற படத்தை அவரே தயாரித்து இயக்கி நடித்துள்ளார். கதை வசனம் எல்லாம் அவரே. நான் ராஜாவாகப் போகிறேன் படத்தில் நடித்த அவனி மோடி பேயாக நடித்துள்ளார். ஆம், இதுவும் ஒரு பேய் படம்தான்.
சமுத்திரகனி, தம்பி ராமையா, மயில்சாமி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்தப் படத்துக்கு தாஜ்நூர் இசையமைத்துள்ளார். ஜுலையில் படம் திரைக்கு வருகிறது.
0 comments:
கருத்துரையிடுக