திருமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிறகு நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தற்போது நிம்மதி அடைந்துள்ளார்கள். இந்நிலையில், இவர்கள் இரண்டு பேரும் இணைந்திருக்கும் ‘நானும் ரவுடிதான்’ படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை பாண்டிச்சேரியில் தொடங்கவிருக்கின்றனர்.
இப்படத்தில் ஹீரோவாக நடித்து வரும் விஜய்சேதுபதி, இப்படத்தை முடித்த கையோடு நலன் குமாரசாமி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். நயன்தாரா கைவசம் நிறைய படங்கள் இருந்தாலும், இப்படத்தை முடித்த பிறகு கார்த்தி நடிக்கும் ‘கஸ்மோரா’ படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இதனால், விஜய்சேதுபதியும்-நயன்தாராவும் ‘நானும் ரவுடிதான்’ இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஆர்வமாக இருந்து வருகின்றனர். ‘நானும் ரவுடிதான்’ படத்தை தனுஷ் தனது ‘வுண்டர்பார் பிலிம்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். அனிருத் இசையமைக்கிறார். பார்த்திபன், ராதிகா சரத்குமார் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
கருத்துரையிடுக