எவ்வளவுதான் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் தமிழில் வெளியாகிற படங்களைப் பார்த்து, பார்த்ததில் ஏதாவது பிடித்திருந்தால் சம்பந்தப்பட்டவர்களை பாராட்டி நாலுவரி சொல்வது ரஜினியின் வழக்கம். அதனை இயல்பாக கடைபிடிக்கும் இளையதலைமுறை நடிகர், விஜய்.
யார் நடித்தப் படமாக இருந்தாலும் தனக்குப் பிடித்திருந்தால் பாராட்டுவது விஜய்யின் குணம். சமீபமாக பேய் படங்கள்தான் அவரை கவர்ந்துள்ளன. டார்லிங், காஞ்சனா 2 படங்களைத் தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் டிமான்டி காலனி படமும் அவருக்குப் பிடித்துள்ளது. படத்தின் இயக்குனர், ஒளிப்பதிவாளர் இருவரையும் மனதார பாராட்டியுள்ளார்.
ஹீரோ அருள்நிதிக்கும் ஒரு பாராட்டு தெரிவித்திருக்கலாம்.
0 comments:
கருத்துரையிடுக