Tuesday 8, Apr 2025
Latest News
வெள்ளி, 22 மே, 2015

Anonymous டிமான்டி காலனி – திரை விமர்சனம்


தமிழ் சினிமாவிற்கு எந்த மந்திரவாதி மந்திரித்து விட்டார் என்று தெரியவில்லை, ஒரே பேய் படங்களாக வரிசை கட்டி நிற்கின்றது. இதுநாள் வரை ஹிட் ட்ரண்டான காமெடி+த்ரில்லர் கலந்த பேய் படங்களாக பார்த்து வந்த நமக்கு நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு முழு நீள திகில் கலந்த பேய் படத்தை கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் அஜய் ஞானமுத்து.
கதைக்களம்
பேய் படங்கள் என்றாலே ஒரு பங்களா, அந்த பங்களாவில் 100 வருடத்திற்கு முன் இறந்து போன மனிதர், அவர் பேயாக அங்கு அலைய, சம்மந்தமே இல்லாமல் ஒரு குரூப் அங்கே சென்று தூங்கியிருந்த அஞ்சலி பாப்பாவை எழுப்பியது போல் எழுப்பி, பிரச்சனையை Wanted ஆக வண்டியில் ஏற்றி வருவார்கள்.
இந்த தொடர் கதைகளுக்கு கொஞ்சம் கூட மாற்றம் இல்லாமல் வந்திருப்பது தான் டிமான்டி காலனி. வாழ்க்கையை வெறுத்து வறுமை நிறம் சிவப்பாக வாழும் 4 இளைஞர்கள், ஒரு இரவு த்ரில்லான அனுபவத்தை நாடி, டிமான்டி காலனிக்கு செல்கின்றனர்.
அங்கு ப்ரிட்டிஷ் ஆட்சியின் போது டிமாண்டி என்பவர், ஒரு சில காரணங்களால் இறக்கிறார். (இந்த சுவாரசிய ப்ளாஷ்பேக்கை திரையில் போய் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்). அந்த பங்களாவிற்கு அருள்நிதி அவருடைய நண்பர்களும் செல்ல, வரும் போது அந்த டிமாண்டியின் பொருளை எடுத்து கொண்டு, அரை கிலோ வம்பை விலைக்கு வாங்கி கொண்டு வருகின்றார்கள்.
இதற்கு அடுத்து இவர்கள் தங்கியிருக்கும் ரூமையே டிமாண்டி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, அதிலிருந்து மீண்டு வந்தார்களா? இல்லை டிமாண்டியிடம் சரணடைந்தார்களா? என்பதை திக் திக் அனுபவமாக கூறியிருக்கிறது இந்த டிமான்டி காலனி.
படத்தை பற்றிய அலசல்
அருள்நிதி எப்போது தரமான படத்தில் தான் நடிக்க வேண்டும் என்று ஒவ்வொரு படத்தையும் பார்த்து பார்த்து நடித்து வருகிறார். அந்த லிஸ்டில் இந்த படமும் இடம்பெறும். இவரின் நண்பர்களாக வரும் ’சூது கவ்வும்’ புகழ் ரமேஷ், அதாங்க பொழுந்து விடிந்தவுடன் சரக்கு அடிப்பாரே அவர் தான், மேலும் 2 நண்பர்கள் உண்மையாக அவர்கள் பயந்து நம்மை அச்சத்தில் உறைய வைத்து விட்டனர்.
ஒரே ரூம் தான் அதில் கொஞ்சம் கூட சுவாரசியம் குறையாமல் திரைக்கதை அமைத்த அஜய் ஞானமுத்துவிற்கு ஒரு சல்யூட். ஆனால், முருகதாஸ் உதவி இயக்குனர் என்பதற்காக தீனா படத்தில் வரும் பாடலுடன் படம் ஆரம்பிக்கின்றது. இது தான் குரு மரியாதை.
ஓஜோ போர்டு(Ouija Board) காட்சி எல்லாம் வைத்து ஹாலிவுட் பட Effectக்கு படம் இருந்தாலும், சில ஹாலிவுட் படம் மாதிரியே இருக்கே சார். அதிலும் கிளைமேக்ஸ் ஒரு கொரியன் பட சீரியல் நியாபகம் வருகின்றது.
க்ளாப்ஸ்
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு முழுமையான திகில் படம். படத்தின் இசை, ஒளிப்பதிவு ஒரு பேய் படத்திற்கு உண்டான அத்தனை அம்சங்களும் இவை இரண்டுமே கொண்டு வருகின்றது. 4 இளைஞர்களை சுற்றி கதை நடந்தாலும், எந்த ஒரு இடத்திலும் அலுப்பு தோன்றாமல் திரைக்கதை உள்ளது.
பல்ப்ஸ்
படத்தின் இசை நன்றாக இருந்தாலும் ஓவர் சவுண்ட், லைட்டா காதையும், தலையையும் பாதிக்கிறது. கொஞ்சம் ஹாலிவுட் படத்தின் சாயல் என திரையரங்கிலேயே Comment வருவதை தடுக்க முடியவில்லை டைரக்டர் சார்.
மொத்தத்தில் நீண்ட நாட்களாக சிரித்தும், பயந்தும் பேய் படம் பார்த்து வந்த நாம், முழுமையாக ஒரு திகில் கலந்த பேய் படத்தை பார்க்க வேண்டுமானால் கண்டிப்பாக இந்த டிமான்டி காலனிக்கு சென்று வாருங்கள்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

Item Reviewed: டிமான்டி காலனி – திரை விமர்சனம் Rating: 5 Reviewed By: Unknown