Thursday 10, Apr 2025
Latest News
வியாழன், 28 மே, 2015

Anonymous இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியான மாசு

சூர்யா நடிப்பில் இன்று உலகமெங்கும் வெளியாகியிருக்கும் படம் ‘மாசு என்கிற மாசிலாமணி’. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். நயன்தாரா, சமுத்திரகனி, பார்த்திபன், பிரேம்ஜி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் இன்றுதான் இந்தியாவில் வெளியாகிறது. இருப்பினும், வெளிநாடுகளில் இப்படம் நேற்றே திரையிடப்பட்டது. இந்நிலையில், ‘மாசு’ முழுப்படத்தையும் திருட்டுத்தனமாக சிலர் இணைய தளத்தில் உலாவ விட்டுள்ளனர்.

தியேட்டரில் இருந்து படத்தை திருட்டுத்தனமாக பதிவு செய்து இணையதளத்தில் உலாவ விட்டுள்ளனர். இந்தியாவில் வெளியாவதற்கு முன்பாகவே இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளிவந்துள்ளது குறித்து மாசு படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து, அந்த இணையதளங்களை முடக்குவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

Item Reviewed: இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியான மாசு Rating: 5 Reviewed By: Unknown