Latest News
சனி, 2 மே, 2015

அஜித்துக்காக காத்திருக்கும் வெங்கட் பிரபு

வெங்கட்பிரபு அஜித் கூட்டணியில் உருவான ‘மங்காத்தா’ படம் சூப்பர் ஹிட்டானது. இப்படம் இருவருக்கும் பெயர் சொல்லும் படமாக அமைந்தது. மேலும் இப்படம் அஜித்தின் 50-வது படமாகும். அஜித் இப்படத்தில் முதல்முறையாக வில்லனாக நடித்திருந்தார். இது அஜித் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது அனைத்து தரப்பினருக்கும் பிடித்த படமாக அமைந்தது.

இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைய வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் வெங்கட் பிரபுவிடம் கேட்டு வருகிறார்களாம். இந்நிலையில், நேற்று அஜித் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு வாழ்த்துச் சொல்வதற்காக அவரை தொடர்புகொண்ட வெங்கட் பிரபு அவரிடம் பிறந்தநாள் வாழ்த்தை கூறிவிட்டு, உங்கள் ரசிகர்கள் ‘மங்காத்தா 2’ எப்போது ஆரம்பமாகும் என்று கேட்கிறார்கள். நீங்கள் நேரம் கிடைக்கும் பொழுது சொல்லுங்கள் நாம் ‘மங்காத்தா 2’ பற்றி பேசுவோம் என்று கூறியுள்ளார். இதற்கு அஜித் எந்த பதிலும் சொல்லாமல் மௌனமாக இருந்தாராம். 

அஜித் ரசிகர்கள் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோரின் விருப்பத்திற்கு அஜித் தலைசாய்ப்பாரா? என்பதை அனைவரும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

Item Reviewed: அஜித்துக்காக காத்திருக்கும் வெங்கட் பிரபு Rating: 5 Reviewed By: Unknown