மாஸ் மே 29 -ஆம் தேதி வெளியாகிறது. வெங்கட்பிரபு இயக்கிய படங்களில் அதிக எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் படம். பேய் படம் என்பதால் சூர்யா பேயாக நடிக்கிறாரா இல்லை நயன்தாராவா என்று மீடியாவும், ரசிகர்களும் ஆவி பின்னாலே அலைகிறார்கள். இந்த சந்தர்ப்பத்தில் மாஸின் பிரஸ்மீட். கேட்க நினைத்தது நினைக்காதது என்று எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்தார் வெங்கட்பிரபு.
மாஸ் எப்படி உருவானது?
நான் பிரியாணி படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இருந்தபோது ஞானவேல்ராஜாவிடம் ஒரு நாட் சென்னேன். அதை கேட்டதும், அவர் பிடித்துப்போய் சூர்யாவிடம் சொன்னார். அவர் அதை படமாக்கலாம்னு சொன்னார். சூர்யா மாதிரி ஒரு மாஸ் ஹீரோ பண்ணும்போது, நான் சொன்ன நாட் தாங்காதுன்னு தோன்றியது. என்னுடைய முன்னாள் உதவி இயக்குனர்கள் எல்லோரையும் வரவைத்தேன்.
தெலுங்கில் ராஜமௌலிகிட்டவொர்க் பண்ணுற ஒருத்தரையும் அழைத்துக்கொண்டேன். அப்படி நாங்க ரொம்ப சீரியசா பண்ணுனது தான் இந்தக் கதை மாஸ். கடைசியில் பார்த்தால் நான் ஞானவேல்ராஜாகிட்ட சொன்ன நாட் இதுல வரவேயில்லை.
தெலுங்கில் ராஜமௌலிகிட்டவொர்க் பண்ணுற ஒருத்தரையும் அழைத்துக்கொண்டேன். அப்படி நாங்க ரொம்ப சீரியசா பண்ணுனது தான் இந்தக் கதை மாஸ். கடைசியில் பார்த்தால் நான் ஞானவேல்ராஜாகிட்ட சொன்ன நாட் இதுல வரவேயில்லை.
சூர்யாவை வைத்து படம் செய்தது எப்படி இருந்தது?
நான், சூர்யா, யுவன் எல்லாம் ஒரே ஸ்கூல்லதான் படிச்சோம். படிக்கும்போது கூட கொஞ்சம் ரிசர்வ்டாதான் இருப்பார் சூர்யா. சூர்யாவை வைத்து படம் இயக்கப்போகிறேன் என்றதும், அவருடைய அப்பா சிவகுமார், சூர்யா ரொம்ப கோபக்காரன், பாத்து பத்திரமா நடந்துக்க என்று என்னை பயமுறுத்தினார். ஏற்கெனவே, சூர்யா மீது பயத்தில் இருந்த எனக்கு அது மேலும் பீதியை கொடுத்தது.
ஆனால், சூர்யா அப்படியெல்லாம் கிடையாது. ரொம்பவும் ஜாலியாக எங்களுடன் பழகினார். ஷாட் முடிந்ததும் கேரவன் வேனுக்குள் முடங்கிவிடாமல் எங்களிடம் அமர்ந்து ஜாலியாக பேசி சிரித்து மகிழ்ந்தார். கார்த்தியை விட தற்போது சூர்யா எனக்கு மிகவும் நெருக்கமாகிவிட்டார்.

0 comments:
கருத்துரையிடுக